deepamnews
இலங்கை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில் ராஜபக்ஷ என்பதில் தவறொன்றுமில்லை என அந்த கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த ரஞ்சித் பண்டார, இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம் என தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்று ஆளும் தரப்பின் ஒருசில உறுப்பினர்கள் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ தீர்மானமல்ல.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அமைச்சரவையை முழுமையாக பதவி விலகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். அதேபோல் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சியின் அரசியல் செயற்பாட்டில் அவதானம் செலுத்துமாறு பஷில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளைக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் முழுமையாக பதவி விலகியது. இறுதியில் பெறுபேறு பிறிதொரு தரப்பினருக்கு சாதகமாக அமைந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில் ராஜபக்ஷ என்பதில் தவறேதுமில்லை. ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

videodeepam

அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி வருகிறது: எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

videodeepam

ஐ.தே.கவின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் –  ரவி கருணாநாயக்க அறிவிப்பு.

videodeepam