ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் போது, 11 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை காணப்படுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட அனுசரணை நாடுகளால் புதிய தீர்மான வரைவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது.
இந்த தீர்மானம் மீது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
வெளியகத் தலையீட்டைப் பரிந்துரைக்கும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளதுடன், இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்கும் ஆதரவு திரட்டி வருகிறது.
இந்த நிலையில், ஜெனிவாவில் குறித்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, 11 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
22 தொடக்கம் 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, 12 நாடுகள் வரை, வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.