இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்தின் தேசிய பேரவையில் பேரவையில் நாங்கள் இணைந்து கொள்ள போவதில்லை.
மேலும் தேசிய சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையாது என்பதனை நாடாளுமன்றம், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறோம்.
இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்காமல் அரசாங்கம் தேசிய பேரவை எனும் போர்வையில் அமைக்கப்படும் சபையில் நாம் இணைந்து கொள்ளமாட்டோம். அதில் எமக்கு எந்தவித உடன்பாடும் இல்லை.
முதலில் அரசாங்கம் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று உடன் வெளிப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் நாங்கள் தேசிய பேரவையில் இணைவதா? இல்லையா என்பது தொடர்பில் கலந்தாலோசிப்போம்.
அத்துடன் இன்றைக்கு இந்த அரசாங்கத்தை நடத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவேயாகும். அவர்களுடைய அமைச்சரவை தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது.
எதிர்காலத்தில் நாட்டின் தீர்மானங்களை பெரமுன கட்சியே மேற்கொள்ளும்.
ஆகவே தேசிய பேரவை என்று கூறிக் கொண்டு உருவாக்கப்படும் சபையில் அங்கம் வகிப்பது எதுவித பயனும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.