உக்ரேனின் சில பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப் போவதாகக் கனடா அறிவித்துள்ளது.
குறித்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான அந்தப் பொது வாக்கெடுப்புகள் மோசடியானவை என்று கனடா கூறியுள்ளது.
வாக்கெடுப்புகளின் முடிவைக் கனடா அங்கீகரிக்கப் போவதில்லை என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
அதில் தொடர்புடைய தனிநபர்கள், அமைப்புகள் மீது தடைவிதிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.