deepamnews
இந்தியா

இஸ்லாமிய அமைப்புக்கு இந்திய அரசு தடை – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

பொப்புலர்  புரண்ட் ஒவ் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பொப்புலர்  புரண்ட் ஒவ் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு  மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது, பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் திகதி அதிரடி சோதனை நடத்தியதில்  106 பேர் கைது செய்யப்பட்டனர்.

8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்றுமுன்தினம் 2-வது முறையாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், பொப்புலர்  புரண்ட் ஒவ் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு நேற்று தடை விதித்துள்ளது.

Related posts

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முற்பட்ட 6 பேர் கைது

videodeepam

யோகா நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்

videodeepam

இலங்கையுடனான இருதரப்பு இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க திட்டம் – இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

videodeepam