deepamnews
இலங்கை

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவுகளை உட்கொள்வதில்லை

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் உணவு முறை ஆபத்தான நிலையில் இருப்பதாவும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படாவிடின் நிலைமை இன்னும் மோசமடையக் கூடும் என்றும் உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலை உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உணவு விலைகள் அதிகமாக இருப்பதால், பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவை உண்பதில்லை என்றும் மாறுபட்ட உணவுகளை உட்கொள்வது குறைந்துள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிவாரணத்துக்கு 63 மில்லியன் டொலர்களை உணவுத் திட்டம் திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதன் பாதியளவே தற்போது கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, அவுஸ்ரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கங்களிடமிருந்தும், ஐக்கிய நாடுகளின் மத்திய அவசரகால பதில் நிதியம், தனியார் துறை பங்காளிகள் மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்தும் மொத்தமாக 29.35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு வந்தார் எரிக் சொல்ஹெய்ம் – இன்று ரணிலைச் சந்திக்கிறார்

videodeepam

அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை

videodeepam

சகோதரியின் நகையை திருடிய இளைஞர் கைது

videodeepam