deepamnews
இலங்கை

நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு அருகில் பத்தரமுல்ல வழியில் தற்போது குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டக்காரரர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் நுழையா வண்ணம் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிட சி.வி.விக்னேஸ்வரன்  தீர்மானம்

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முழுமையாக கைவிடப்பட்டது..?

videodeepam

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய சட்டத்தரணிகள் சங்கத்தினால் குழு நியமனம்

videodeepam