deepamnews
இலங்கை

ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்

ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்” என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, ”இலங்கை மீதான ஜெனிவா தீர்மானங்களை தாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.  

இந்த அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

ராஜபக்சக்களின் தான்தோன்றித்தனமான சில முடிவுகளால் நாடு இன்று படுகுழியில் விழுந்துள்ளது.

ராஜபக்சக்களின் சகாவான ரணில் விக்ரமசிங்கவால் நாட்டை மீட்டெடுக்க முடியாது. மக்கள் ஆணை மூலம் புதிய அரசை நிறுவினால்தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும்” என்றார்.

Related posts

மூன்று பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தயார்.

videodeepam

மன்னாருக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக்  சிவில் அமைப்புக்களுடன் சந்திப்பு.

videodeepam

இலங்கையை வந்தடைந்தார் இந்திய விமானப்படை தளபதி – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தீர்மானம்

videodeepam