deepamnews
இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 3 முக்கிய அரச நிறுவனங்கள் – வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகிய அரச நிறுவனங்கள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, முன்னர் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்து,தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை, தற்போது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும், தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இருந்த ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களமும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

Related posts

கிளிநொச்சி பாடசாலையில் வன்முறைச் சம்பவம் – வெடித்தது போராட்டம்!

videodeepam

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

videodeepam

இரத்து செய்யப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் – வெளியாகிய முக்கிய அறிவிப்பு

videodeepam