deepamnews
இந்தியா

உத்தரகண்ட் பேருந்து விபத்தில் 33 பேர் பலி.

உத்தரகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

பவுரி கர்வால் பகுதியில் நேற்றுமுன்தினம்  இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது, 25 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதுடன்,  21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காயமடைந்த மேலும் 8 பேர் மரணமாகியுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு

videodeepam

திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படும் என்ற யூகங்கள் பொய்யானது என்கிறார்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

videodeepam

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – மத்திய இணை அமைச்சர் முரளிதரன் உறுதி.

videodeepam