deepamnews
சர்வதேசம்

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு – மூவருக்கு வழங்கப்படுகிறது

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு இம்முறை, அமெரிக்கா, டென்மார்க்கை சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிக்கு அறிவிக்கப்பட்டதுடன், பௌதிகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று  இரசாயனவியல்துறை நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கரோலின், பேரி ஷார்ப்லெஸ்-க்கும், டென்மார்க்கை சேர்ந்த மோர்டனுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுக்காக இவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

Related posts

எரிமலை வெடிப்பை அடுத்து தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவாகியது புதிய தீவு

videodeepam

கனடாவில் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு

videodeepam

முன்னாள் ஜனாதிபதியை விடுவிக்கக்கோரி போராட்டம் – பெருவில் அவசர நிலை பிரகடனம்

videodeepam