deepamnews
சர்வதேசம்

கிரைமியா பாலத்தில் பாரஊர்தியில் குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல்

ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் கிரீமியா இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய ஜனாதிபதி புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி 2018-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம் ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கிறது.

தொடருந்து மற்றும் வாகனங்கள் செல்வதற்கு என இரண்டு பிரிவுகளாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தில், நேற்றுக் காலை வெடிபொருட்களை நிரப்பிய பாரஊர்தியை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால், பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன.

அப்போது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர்.

தொடருந்து பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு தொடருந்து ஒன்றிலும் தீ பற்றிக் கொண்டது.

இதனால், 7 எரிபொருள் தாங்கிகள் தீக்கிரையாகின.

கிரிமியா பிராந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திய புகைப்படப்பிடிப்பாளர்கள் –  விபத்தில் சிக்கினார் இளவரசர் ஹரி

videodeepam

3500 ஐ தாண்டியது உயிர் பலி – எட்டு மடங்காக அதிகரிக்கலாமென எச்சரிக்கை

videodeepam

உக்ரைனில் போரில் முடங்கி பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

videodeepam