ஆயிரக்கணக்கான தற்கொலைப்படை மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி, இஸ்லாமாபாத்தை எமது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லை பிரச்சினைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையிலேயே பாகிஸ்தான் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்தால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக தலிபான்கள் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, வெளியிட்ட காணொளியில்,
“ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது; அதை எவ்வாறு பாதுகாப்பது என்று அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர்” என்றும் எச்சரித்துள்ளார்.