திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்ரமநாயக்கா போன்றோரின் அமைச்சு செயற்பாடுகளுக்கு ஆசிவேண்டி, திருகோணமலை திருக்கேதீஸ்வரத்தில் ஆலய நிர்வாகத்தினரால் விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதனிடையே திருகோணமலைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டகாளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலக வளாகத்தில் கட்சி உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீட்டுத் தோட்ட செயற்பாடுகளை பார்வையிட்டார்.
நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒவ்வொருவரும் முடிந்தளவிற்கு வீட்டுத் தோட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.