deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தான் இராணுவத்தின் ஊழல்கள் – பல கோடி சொத்து சேர்த்த முன்னாள் இராணுவ தளபதி

பாகிஸ்தான் இராணுவத்தில்  காணப்படும் ஊழல் குறித்து அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான்னின் முன்னாள் இராணுவ தளபதி ஜாவிட் பஜ்வாவின் குடும்பத்தினரின் வரி குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதை தொடர்ந்து அவரது பதவிக்காலத்தில் அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஏசியன் லைட் இதனை தெரிவித்துள்ளது.

எனினும் பாகிஸ்தான் இராணுவத்திற்குள்  ஊழல் மிகவும் அதிகம் என்பதால் இந்த தகவல் எவருக்கும் ஆச்சரியமளிக்கவில்லை.

தற்போது வெளியாகியுள்ள விடயங்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்குள் காணப்படும் சீரழிவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பெரும் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் போன்ற பெரும் தொகையை பாக்கிஸ்தானின் மூத்த அதிகாரிகளும்  அதிகாரிகளும் பெறுகின்ற போதிலும் அவர்கள் இராணுவத்திற்கு பொருந்தாத  விதத்தில் ஊழலில் ஈடுபடுகின்றனர் என ஏசியன் லைட் தெரிவித்துள்ளது.

பஜ்வாவின் குடும்பத்தின் சொத்து விபரங்களை பாகிஸ்தானின் பாஸ்ட்போகஸ் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

பஜ்வாவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

பஜ்வா பாகிஸ்தானின் இராணுவ தளபதியாக பதவி வகித்தவேளை அவரது குடும்பத்தினர் 12.7 பில்லியன் சம்பாதித்துள்ளனர்.

அவரது மனைவியின் சொத்து 2016 முதல் 2022 வரையான காலப்பகுதியில்2.2 பில்லியனாக அதிகரித்தது.

பாகிஸ்தானின் தேசிய விமானசேவைக்கு மனித வள ஆலோசகராக தனது உறவினரை நியமித்தார். தனது 70 வயது சகோதரருக்கு லண்டனில் பாக்கிஸ்தான் எயர்லைன்சில் நல்ல ஊதியத்தில் வேலையொன்றை பெற்றுக்கொடுத்தார் என ஏசியன் லைட் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு இராணுவத்தின் ஊழலே காரணம் என ஏசியன் லைட் தெரிவிக்கின்றது.

தற்போது பஜ்வாவிற்கு மிகவும் பிடித்தமான முனிர் பாக்கிஸ்தான் இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இனி ஊழலிற்கு எதிரான நடவடிக்கைகள் எதுவுமின்றி பாக்கிஸ்தான் இராணுவத்தில் ஊழல் தொடரும் என ஆசியன் லைட் தெரிவிக்கின்றது.

Related posts

நைஜீரியாவில் பண மதிப்பிழப்பு – வங்கிகளுக்கு தீ வைத்து மக்கள் போராட்டம்  

videodeepam

 ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்ட மா அதிபர் அறிவிப்பு 

videodeepam

நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி.

videodeepam