deepamnews
சர்வதேசம்

துபாயில் புர்ஜ் கலிபா அருகிலிருந்த 35 மாடி கட்டடம் தீக்கிரை

துபாயில் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Boulevard Walk எனும் குறித்த கட்டடம் உலகின் உயரமான புர்ஜ் கலிபா (Burj Khalifa) கட்டடத்தின் அருகே உள்ளது.

இந்த கட்டடத்தின் குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக மேல் நோக்கி பரவியது. இதனால் கட்டடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

துபாயில் உயரமான கட்டடங்களில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. இதற்கு கட்டுமான பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு புர்ஜ் கலிபா அருகே ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளில் தீவிபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மெக்சிகோவில் பாரிய தீ விபத்து –  39 பேர் உயிரிழப்பு

videodeepam

ஆப்கானிஸ்தானில் பாரிய பொருளாதார நெருக்கடி – 1.5 கோடி மக்கள் பாதிப்பு!

videodeepam

பெண்களின் உரிமைகள் மீதான தலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராக ஐ.நா. எச்சரிக்கை    

videodeepam