deepamnews
விளையாட்டு

போராடி தோற்றது இந்தியா – தென்னாபிரிக்கா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது.

மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 40 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து 250 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதனால் தென்னாபிரிக்க அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி 9ஆம் திகதி ராஞ்சியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க ஓபன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செம்பியன் பட்டத்தை வென்ற கோகோ காஃப் !

videodeepam

குற்றச்சாட்டை மறுக்கும் தனுஷ்க குணதிலக்க – நீதிமன்றம் பிணை மறுப்பு

videodeepam

2022 பீபா உலகக் கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டீனா

videodeepam