ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பாதியளவின் ஆதரவை இலங்கை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கை தொடர்பான தீர்மானம் 13 பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சந்தித்த மிக மோசமான தோல்வி இதுவாகும்.
2013 இல் 12 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுதான் மோசமான தோல்வியாக இருந்தது.
இலங்கை பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்த நேரத்தில், பல நாடுகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு ஏழு நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளித்தன.
கடந்த ஆண்டு 12 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தன. இதன்படி, இலங்கையின் ஆதரவு 50 வீதத்தால் குறைந்துள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை வழங்கி அவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகவியலாளர் சமிந்த பெர்டினாண்டோ படைகளைப் பாதுகாக்க தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகத் தெரிகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.