deepamnews
இலங்கை

இலங்கைப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு

சவாலான காலங்களிலும், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்ற இலங்கையின் படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இந்திய ராணுவ பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற, இலங்கைப் படைகளின் சேவையில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற கொள்கைக்கு இணங்க, திறன் மேம்பாட்டில் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

சவாலான நேரங்களிலும் கூட, இலங்கை ஆயுதப்படைக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆண்டுதோறும் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்படும் 1500 பயிற்சி வாய்ப்புகளில் அதிகபட்சம் இலங்கைப் படையினருக்கே வழங்கப்படுகிறது என்றும் இந்தியத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்

videodeepam

அமெரிக்காவின் Anchorage கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

videodeepam

நிவாரண திட்டங்கள் மூலம் அரசியல் ஆதாயம் – பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

videodeepam