சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகரிக்காமலும், 60 கிலோமீற்றர் வேகத்திற்கு குறையாத வகையிலும் பயணிக்குமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது உத்தரவாக பிறப்பிக்கப்படவில்லை. எனினும் , அவதானத்துடன் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீ்ற்றருக்கும் அதிகரிக்காத வேகனத்தில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முகில் கூட்டங்கள் காணப்படுவதனால் சாரதிகள் மின் விளக்கினை ஒளிரச்செய்தப்படி பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் வேறு தகவல்கள் அவசியமாயின் 1969 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.