deepamnews
இலங்கை

சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்!

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று கொழும்பில் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரைத் தான் சந்தித்துப் பேசியதாக , எரிக் சொல்ஹெய்ம் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களும் பழைய நண்பர்களுமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருடன் கொழும்பில் சந்தித்து உரையாடியிருந்தேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

சந்திப்பின்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதார மீட்சி, பசுமையான அபிவிருத்திகள் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு – சாதகமான ஒரு தீர்மானத்தை அறிவிக்கவுள்ள சீனா

videodeepam

அரச அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை – அரச அச்சகம் தகவல்

videodeepam

இலங்கையின் கடன் தொடர்பான பத்திரத்திற்கு உத்தரவாதம் வழங்கியது சீனா

videodeepam