இலங்கையில் இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் இன்று(14) காலை 6.30 மணிக்கு அறிவித்துள்ளது
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகின்றது.