deepamnews
இலங்கை

வெடுக்குநாறி ஆலய வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன், அபிவிருத்தி பணிகள், தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் தம்பிராசா மதிமுகராசா, மற்றும் நிர்வாகத்தினர்களான தமிழ்செல்வன், சசி ஆகியோர் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.

குறித்த வழக்கு தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு ஆலய நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிவானால் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தெற்காசியாவின் மிகப்பெரிய தீர்வை வரியற்ற வணிக வளாகம் இலங்கையில்

videodeepam

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை

videodeepam

30 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் சந்தேகபர் கைது!

videodeepam