deepamnews
இலங்கை

வல்வெட்டித்துறைப் பகுதியில் இராஜாங்க அமைச்சரின் மெய்க்காவலர் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு

வல்வெட்டித்துறைப் பகுதியில், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தவின் பாதுகாவலரினால் நேற்றிரவு நாய் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த  இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த வடமராட்சிக்கு தனிப்பட்ட முறையில் முன்னெடுத்த பயணித்தின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தனது குடும்ப நண்பர் ஒருவரை சந்திக்க நேற்றிரவு அவரது வீட்டுக்குச் சென்ற போது,  வளர்ப்பு நாய் அவரைக் கண்டதும் குரைத்துள்ளது.

இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதனால் நாய் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

லொகான் ரத்வத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த போது, அனுராதபுர சிறைச்சாலைக்குள் தமிழ் அரசியல் கைதிகளை முண்டியிட்டச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே போக்குவரத்து சேவை

videodeepam

புதிய மின் கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான வேலைத்திட்டம் மீளாய்வு

videodeepam

மட்டக்களப்பில் இறந்து கரையொதுங்கிய மீன்கள் – அச்சத்தில் மக்கள்

videodeepam