deepamnews
இலங்கை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

“மியான்மரில் வாழ முடியாது” யாழில் கரையொதுங்கிய அகதிகள் கோரிக்கை

videodeepam

உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு?

videodeepam

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

videodeepam