deepamnews
இந்தியா

விடுவிக்க கோரி நளினி உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக் கோரி நளினி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தல் விடுதலை செய்யப்பட்டார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்ந்து இவ்வழக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதியுள்ள 6 பெரும் விடுதலை கோரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிசந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக் கோரி தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் தமிழநாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் நளினி, ரவிசந்திரன் ஆகியோரை சிறையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும் என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நளினி, ரவிசந்திரனைத் தொடர்ந்து ராபட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

நளினி, ரவிசந்திரன், ராபட் பயர்ஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 5 பெரும் தாக்கல் செய்துள்ள வழக்கு, நாளை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். காவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

Related posts

மக்களின் முன்பாக தலைவணங்குகிறேன் – குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி உருக்கம்

videodeepam

தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதுரை மேல் நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு உத்தரவு

videodeepam

இன்று இந்தியா வருகிறார் ஐ.நா பொதுச்செயலர் அண்டனியோ குட்டரெஸ்

videodeepam