deepamnews
இந்தியா

மக்களின் முன்பாக தலைவணங்குகிறேன் – குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி உருக்கம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அளித்த மக்களின் முன்பு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல் வெற்றியை அந்த மாநில பாஜக தலைவர்கள், தொண்டர்கள்  உற்சாகமாக கொண்டாடினர். இதேபோல டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குஜராத் தேர்தல் வெற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதன்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் தேர்தலை நேர்மையாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. ஒரு வாக்குச்சாவடியில் கூடமறுவாக்குப்பதிவு நடைபெறவில்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்றைய இளைஞர்கள் பாஜகவின் வளர்ச்சி திட்டங்களை விரும்புகின்றனர். ஜாதி அரசியல், வாரிசுஅரசியலை அவர்கள் விரும்பவில்லை. அதனால் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் பாஜக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதன்காரணமாக வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது.

காங்கிரஸின் ஊழல் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் ஊழலற்ற பாஜக ஆட்சியை விரும்புகின்றனர். பாஜக ஆட்சியில் ஏழைகள், நடுத்தர வகுப்பு மக்கள் எனஅனைத்து தரப்பினரும் முன்னேறுகின்றனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தேன்.

பாஜக மீது நம்பிக்கை வைத்து குஜராத் மக்கள் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனர். குஜராத் வரலாற்றில் பாஜக புதிய வரலாறு படைத்திருக்கிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆனாலும் பாஜக மீதான மக்களின் அன்பு குறையவில்லை. பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களால் பலன் அடைந்த பெண்கள் ஆட்சி தொடரஆதரவளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்  என்று தெரிவித்துள்ளார்.

Related posts

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு – அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை.

videodeepam

கிழக்கு மாகாண ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

videodeepam

இந்திய ஊடகவியலாளர்களே இல்லாத நாடாக மாறுகிறது சீனா

videodeepam