தென்பகுதிக் கடலில் ஆறு கடற்படையினருடன் காணாமல் போன கடற்படைப் படகை, கண்டுபிடிக்க விமானப்படையும், கடற்படையும் இணைந்து, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இழுவைப்படகு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான கப்பல்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படையினர் ஆறு பேருடனும், கடந்த செப்ரெம்பர் 17ஆம் திகதி முதல தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
படகின் தொலைத்தொடர்பு சாதனம் பழுதடைந்திருக்கலாம் அல்லது இயந்திரம் செயலிழந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போதைய கடற் கொந்தளிப்பு மற்றும் காற்றினால் ஆழ்கடலில் காணப்பட்ட அந்தப் படகு இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.
அதனால் காணாமல் போன படகு குறித்து அனைத்து அண்டை நாடுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை எந்த தகவலும் வரவில்லை.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.