deepamnews
இலங்கை

தேர்தல் தாமதம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதன் காரணமாக விசாரணைகளுக்காக வேறொரு திகதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் 10வருடங்களுக்கு பின்னர் வளிமண்டலத்தில், அதிகளவான மாசு

videodeepam

சர்வதேச தாதியர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது

videodeepam

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீள்கின்றது மருத்துவமனை விசாரணை.

videodeepam