உக்ரைனில் பாலியல் வல்லுறவு ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக, பாலியல் வன்முறை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை ஐ.நா பதிவு செய்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமன்றி, ஆண்களும் சிறுவர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
ரஷ்ய வீரர்கள் வயாகராவை பயன்படுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியமளித்துள்ளனர்.
இதுவும் ஒரு இராணுவ உத்தியாக உள்ளது.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வயது நான்கு முதல் 82 வயது வரை இருக்கும்.
அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் குறைந்தளவு மட்டுமே என்றும் அவர் கூறினார்.