deepamnews
இந்தியா

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைக்கமைய, சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் இதனை தொடர்ந்து சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Related posts

பாதுகாப்பு நிதி என்பது அரசுத்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் – இந்திய  பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

கச்சத்தீவு பறிபோக திராவிட முன்னேற்றக் கழகமே காரணம் – குப்புசாமி அண்ணாமலை குற்றச்சாட்டு.

videodeepam

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் உலோகப் படிமம் கண்டுபிடிப்பு

videodeepam