deepamnews
இலங்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெல்லிப்பழையில் பேரணி!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிவடக்கு பிரதேச சபை தெல்லிப்பழை உப அலுவலகம் மற்றும் தெல்லிப்பழை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் காலை 9 மணியளவில் ஆரம்பித்த பேரணி தெல்லிப்பழைச் சந்தியில் நிறைவடைந்தது.

போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பாலின சமத்துவத்தை பேணல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் என பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

Related posts

விக்னேஸ்வரனைப் போல் நேரத்துக்கு நேரம் கொள்கையை மாற்றுபவர்கள் நாம் அல்லர்! –  சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு.

videodeepam

நீதிபதிகளின் கௌரவத்தை பாதுகாக்க சட்டத்தின் ஊடாக நடவடிக்கை முன்னெடுப்போம் – ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு

videodeepam

இலங்கையில் மத சுதந்திரத்திற்கு தடை – சர்வதேச மத சுதந்திர அமெரிக்க ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam