deepamnews
இலங்கை

இலங்கையில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

இந்திய கடன் வசதியின் ஊடாக முற்பதிவு செய்யப்பட்ட மருந்துகளை நாட்டிற்கு இதுவரை கொண்டுவர முடியாமல் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயிரத்திற்கும் அதிகமான மருந்து வகைகளை நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் தாமதமாகி வருவதால், பல வகையான மருந்துகளின் தட்டுப்பாடு இதுவரையில் தீர்க்கப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து 4 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பெறப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு முகாமைத்துவத்தின் கீழ், வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, கடுமையான மருந்துப் பற்றாக்குறையினால் சிகிச்சை சேவைகள் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல சுகாதார நிபுணர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts

ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமரிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

videodeepam

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இன்று இலங்கைக்கு வருகிறார்

videodeepam

யாழ் விமான சேவை மீண்டும் ஆரம்பம் .

videodeepam