deepamnews
இலங்கை

நீர் தொட்டியில் வீழ்ந்து பெண் குழந்தை பலி!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றய தினம் மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிட்ட கொண்டிருந்தது. எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.

சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பட்டாசு வெடிக்கும் போது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்  

videodeepam

பதவி விலகலை மறுக்கிறார் பிரதமர் தினேஷ் குணவர்தன – உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிப்பு

videodeepam

உரம் இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்

videodeepam