நிதி மோசடி வழக்கில் கைதாகியுள்ள திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஜானகி சிறிவர்தன எனும் சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர், கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்றும் கூறப்படுகிறது.