வவுனியா, உளுக்குளம் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வவுனியா பாவற்குளம் பகுதியில் உள்ள பன்சாலை வீதி ஊடாக சென்ற 3 இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிஸார், அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த 3 இளைஞர்களும் உளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 – 25 வயதிற்குட்பட்ட வவுனியா சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்