deepamnews
இலங்கை

மார்ச்சில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்- தேர்தல் ஆணைக்குழு உறுதி

எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதியாகும் போது, உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான புதிய அமர்வுகளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டார்.

அதற்கு தேவையான சட்ட ரீதியான அதிகாரங்கள் தம்மிடம் காணப்படுவதாக அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் ஊடாக தேர்தலை மார்ச் மாதம் 20ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை காணப்படுவதாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இதனிடையே, எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் ஊடாக தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்! – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சூளுரை

videodeepam

விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளலாம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

videodeepam

வெசாக் தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

videodeepam