deepamnews
இலங்கை

போதைப்பொருளுடன் மூவர் கைது

வவுனியா, உளுக்குளம் பொலிஸார்  விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வவுனியா பாவற்குளம் பகுதியில் உள்ள பன்சாலை வீதி ஊடாக சென்ற 3 இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிஸார், அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த 3 இளைஞர்களும் உளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 – 25 வயதிற்குட்பட்ட வவுனியா சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார்  தெரிவித்தனர்

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு உறுப்பினர் நியமனம்.

videodeepam

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை

videodeepam

யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

videodeepam