deepamnews
இலங்கை

கடினமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதால் குற்றஞ்சாட்டப்படுகிறோம் – மத்திய வங்கி ஆளுநர் ஒப்புதல்

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு மக்கள் சார்பற்ற சில கடினமான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்படும் தரப்பினரால் எம் மீது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், எடுக்கப்படும் தீர்மானங்கள் சரியானவை என்றால், அவை நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

மாத்தறை ராகுல கல்லூரியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் அக்கல்லூரியின் பழைய மாணவரான மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தகுதியுடையோருக்கு உரிய இடம் வழங்கப்பட்டமையினாலேயே ஏனைய நாடுகள் அபிவிருத்தி அடைந்துள்ளன.

மாறாக, தகுதியற்றவர்கள் பொருத்தமற்ற இடங்களுக்கு நியமிக்கப்படும்போது முன்னேற்றம் வெற்றியளிக்காது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வது இலகுவான விடயமல்ல என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற ரீதியில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, சில கடினமான தீர்மானங்களையும் எடுக்கவேண்டியுள்ளது. எவ்வாறிருப்பினும், அவை மக்களுக்கு ஏற்ற தீர்மானங்களாக இருக்காது.

மக்கள் சார்பற்ற கடினமற்ற தீர்மானங்களை எடுக்கும்போது, அவற்றால் ஒரு தரப்பினர் பாதிக்கப்படக்கூடும். இந்த பாதிப்புக்களுக்கு மத்தியில் எம் மீது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படலாம்.

எவ்வாறிருப்பினும், எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், நம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் சரியானவை என்றால் அதனை இடைவிடாது முன்னெடுத்துச் செல்லக்கூடிய இயலுமை காணப்பட வேண்டும்.

எனவே, தற்போது எம்மால் எடுக்கப்படும் சில தீர்மானங்களினால் குறுகிய கால நெருக்கடிகள் ஏற்படுகின்ற போதிலும், அவற்றை செயற்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

அவ்வாறு செய்தால், விரைவில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும் என்றார்.

Related posts

இன்று முதல் பணிப்புறக்கணிப்பு – சமுர்த்தி வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

videodeepam

எரிபொருள் சந்தையில் மேலும் ஒரு நிறுவனம் பிரவேசம் – ஒப்பந்தம் கைச்சாத்தானது

videodeepam

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ – தேர்தலுக்குத் தாம் தயார் எனவும் தெரிவிப்பு

videodeepam