2023 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்க சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, கடந்த ஏழு நாட்கள் விவாதத்திற்குப் பின்னர் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது