deepamnews
இலங்கை

கேரள முதலமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்துள்ளார்.
 கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, 1970 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையகத்தை சேர்ந்த 1480 குடும்பம் கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டனர்.
 
இவர்கள் ஆர்.பி.எல். நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலும் தொழில்புரிகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சசினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்தும்  இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு கேரள முதல்வர் பிரனய் விஜயன் வாழ்த்துக் கூறியுள்ளார். மேலும், இலங்கைக்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமான் விடுத்த அழைப்பையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Related posts

சமுர்த்தி வங்கி தொடர்பில் அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு

videodeepam

பிரதமரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam

சாதாரணதரப் பரீட்சை பத்தாம் தரத்தில் –  கல்வி அமைச்சர் சுசில் அறிவிப்பு.

videodeepam