deepamnews
இலங்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் அதனை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் சம்பந்தன் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் குறித்த ட்விட் பதிவில் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

Related posts

பாணந்துறையில் பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

videodeepam

இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

videodeepam

கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்கிறது சர்வதேச நாணய நிதியம்

videodeepam