நாடளாவிய ரீதியில் விலங்குகள் மற்றும் இறைச்சியைக் கொண்டு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்களில் கால்கடைகள் உயிரிழந்தமைக்கு நோய்த்தொற்று காரணமில்லையெனவும் குளிரான காலநிலையே காரணமெனவும் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இதற்கான அனுமதியை மீள வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்து 800 வரையான மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன.
இந்த விலங்குகள் உயிரிழந்தமை தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மேற்கொண்ட பரிசோதனையில் அதிக குளிர் காரணமாகவே அவை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.