அரிசி இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்படாதென தாம் எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இம்முறை பெரும்போகத்தில் சுமார் 08 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அவற்றில் 748,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தற்போது செய்கை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.