deepamnews
இலங்கை

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதி

நாட்டின் பொருளாதார நிலையை எளிதாக்க அரசாங்கம் எடுத்துள்ள குறுகிய கால நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நிதி மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பில் உலக வங்கியின் பணிப்பாளர் சியோ காந்தா உள்ளிட்ட குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடினர்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தொடர்ச்சியான நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்திய அவர்கள், கடன் மறுசீரமைப்பு திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கடன் தொகையான 2.9 பில்லியன் டொலர்கள் பெறப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.

Related posts

ஓமானில் இலங்கை தூதரகத்தை சேர்ந்தவர் 17 இலட்சத்திற்கு பெண்களை விற்கிறார் – பாதிக்கப்பட்ட பெண் தகவல்

videodeepam

ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெறும் நிலையில் காஷ்மீரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

videodeepam

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை  இரத்து செய்தது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்  

videodeepam