பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வணிகக்குழுவான பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் நிறுவனங்களின் முதலீடு, விலை உயர்வு மற்றும் பொருளாதாரம் சுருங்கும் நிலை என்பன அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் எனவும் பிரித்தானியாவின் வணிகக்குழுவான பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் எனவும் பிரித்தானிய தொழில் கூட்டமைப்பின் தலைவர் டோனி டேங்கர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியா மந்தநிலையில் இருப்பதாகவும், நீண்ட கால உற்பத்தித்திறனையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்க இப்போது நடவடிக்கை அவசியம் எனவும், 190,000 பிரித்தானிய வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு பொருளாதாரம் 0.4 சதவீதம் சுருங்கும் என்றும் பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.