deepamnews
இந்தியா

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய இருப்பதாகவும், இமாச்சல் பிரதேசத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவினாலும் கூட, பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்க இருப்பதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற முக்கியமான கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்கள் என தேர்தல்கள் நடக்கும்போது, தேர்தல்கள் முழுமையாக நடந்து முடிந்த பிறகே கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியும். அதற்கு முன்பாக வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. 89 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் இன்று (டிச.5) நடைபெற்றது. இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் முடிவடைவதால் மாலை 5.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த தடை உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பல்வேறு நிறுவனங்களும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. குஜராத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 92 தொகுதிகளிலும், இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 35 இடங்களிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் குஜராத்தில் பாஜக 117 இடங்கள் முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்கள் முதல் 51 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 6 இடங்கள் முதல் 13 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியக் கடலோரப் பகுதியில் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

videodeepam

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்கிறார் எஸ்.ஜெய்சங்கர்

videodeepam

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு – அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை.

videodeepam