deepamnews
இலங்கை

நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!

நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் சட்டவிரோதமாக முறையில் சம்பாதித்த பணதொடர்பான விசாரணை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக முறையில் சம்பாதித்த பணத்தை நிறுவனமொன்றில் முதலீடு செய்தமை தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று (வியாழக்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

இதன்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்த நிலையிலேயே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

videodeepam

கோழி இறைச்சி மற்றும் மீனின் விலைகள் அதிகரிப்பு தற்காலிகமானது  – வர்த்தக அமைச்சு

videodeepam

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

videodeepam