deepamnews
இலங்கை

சீன வீட்டுத் திட்டம் அரசியல் நோக்கமாக இருக்கக் கூடாது – இடைநடுவில் உள்ள வீட்டுத் திட்டத்தை முழுமை படுத்துங்கள்

வடபகுதிக்கு சீனாவினால் வழங்கப்படவுள்ள வீட்டத் திட்டம் அரசியல் நோக்கங்களை அடைவதற்கான திட்டங்களாக அமையக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடபகுதி கடற்தொழிலாளர்களுக்கு வீடு அமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்காக சீன அரசாங்கம் பாரிய நிதி ஒன்றை வழங்கவுள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

சீன அரசாங்கம் உதவி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் வடபகுதியில் அரசியல் நோக்கங்களுக்களை அடைவதற்காக திட்டங்களை வழங்குவது எமது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வட மாகாணத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 2500க்கும் மேற்பட்ட வீடுத் திட்டங்கள் முழுமை படுத்தப்படாமல் கிடப்பில் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய தற்போதைய அரசாங்கம் தம்மிடம் நிதி இல்லை என காரணம் கூறும் நிலையில் மழை காலங்களில் குறித்த வீட்டில் வசிப்போர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

ஆனால் தற்போது சீனா வீட்டுத் திட்டத்தை வழங்கப் போகிறது என அமைச்சர் கூறும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூரணப்படுத்தாதவர்களுக்கு ஏன் சீனாவின் நிதியை வழங்க முடியாது.

வடபகுதி கடற்கரையோரங்களை சீனா இலக்கு வைத்து அயல் நாடான இந்தியாவுக்கு சவால் விடுவதற்கு எமது மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக் கூடாது.

ஆகவே வடபகுதியில் வீட்டு திட்டம் வழங்கப்பட்டு முழுமை பெறாத விவரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்று அவர்களின் வீட்டுகளை முழுமைப்படுத்த உதவ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு.

videodeepam

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

videodeepam