deepamnews
இலங்கை

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்றும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை பாதித்துள்ள வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

மேலும் சில நிறுவனங்களின் ஊழியர்கள் தமது உணவு நேரத்தில், தமது பணியிடங்களுக்கு முன்பாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீட்டு வழக்கை தாமதப்படுத்த 25 கோடி லஞ்சம் – விஜேதாச ராஜபக்ஷ 

videodeepam

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காலக்கெடு – சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை – சீன தூதரகம் நம்பிக்கை

videodeepam